தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து 2024-25ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதில், பள்ளியின் வேலை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், 1 முதல் 12ம் வகுப்புக்கான தேர்வு காலங்கள், உயர்க்கல்விக்கான வழிகாட்டு வகுப்புகள், விடுமுறை போன்ற விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
24
Quarterly Exam
அதில் நடப்பு கல்வி ஆண்டில் மொத்த வேலை நாள் 210லிருந்து 220ஆக உயர்த்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இனி அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கம் போல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் 220லிருந்து 210ஆக குறைக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட புதிய நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 27-ம் தேதிக்குள் (அதாவதுவெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.
44
School Reopen
செப்டம்பர் 28ம் தேதி சனி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 5 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. அதன்படி, செப்டம்பர் 28ம் தேதி சனிக்கிழமை, 29 ஞாயிறு, செப்டம்பர் 30 திங்கள், அக்டோபர் 1 செவ்வாய், அக்டோபர் 2 புதன்( காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை) ஆகியவையாகும். இதில் ஒருநாள் வார விடுமுறை வந்து விடுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். அப்படி பார்த்தால் காலாண்டு தேர்வு விடுமுறை 3 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.