தக்காளி, வெங்காயம் ஒரு கிலோ இவ்வளவு தானா.! மிஸ் பண்ணாதீங்க- பை நிறைய அள்ளிச்செல்லும் மக்கள்

Published : Jun 10, 2025, 07:37 AM ISTUpdated : Jun 10, 2025, 12:54 PM IST

கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. மழையின் காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

PREV
15
ஏறி இறங்கும் காய்கறிகளின் விலை

காய்கறிகளிகள் தான் சமையலை ருசியாக மாற்றக்கூடியதாகும். அந்த வகையில் எந்த வித சமையல் செய்வதாக இருந்தாலும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை அதிகம். எனவே காய்கறி சந்தையில் இல்லத்தரசிகள் எந்த காய்கறிகள் வாங்குவார்களோ இல்லையோ Tomato And Onion கட்டாயம் வாங்குவார்கள். 

இதற்காக மற்ற காய்கறிகளை விட இந்த காய்கறிகள் மூட்டை மூட்டையாக பெட்டி பெட்டியாக சந்தையில் வந்து குவிந்து வருகிறது. ஆனால் இதன் விளைச்சல் குறைந்தால் அவ்வளவு தான் பல மடங்கு விலையானது அதிகரிக்கும்.

25
சரிந்தது தக்காளி, வெங்காயம் விலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயை கடந்து விற்பனையானது. வெங்காயமும் இதற்கு போட்டியாக 150 ரூபாயை தாண்டியது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் கவலையடைந்த நிலையில் தக்காளி வெங்காயத்தின் வரத்து அதிகரிக்க தொடங்கியது. 

இதன் காரணமாக 50 ரூபாய்க்கு 4 முதல் 5 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலையும் அடிமட்ட விலைக்கு சரிந்துள்ளது. இதனால் தரத்தை பொறுத்து ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

35
அதிகரித்த தக்காளி வெங்காயம் விளைச்சல்

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில் வரத்து தற்போது அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகவும், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

45
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

55
காய்கறி விலை என்ன.?

வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், 

மாங்காய் ஒரு கிலோ 15ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

Read more Photos on
click me!

Recommended Stories