Actor Santhini Vs Ex Minister Manikandan: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்கப் போகிறார்கள். தன்னுடைய வாழ்வாதாரத்தை கவனித்து கொள்வதாகவும் சொத்துக்கள் தருவதாகவும் கூறி வழக்கை வாபஸ் பெற செய்தார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், என்னை மாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்டாயப்படுத்தி மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் நாடோடிகள் பட நடிகை சாந்தினி புகார் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
25
ஆதாரத்துடன் போட்டோவை வெளியிட்ட சாந்தினி
சாந்தினியை தனக்கு யார் என்று தெரியாது என மணிகண்டன் தெரிவித்த நிலையில் அவருடன் இருந்த புகைப்படங்களை சாந்தினி வெளியிட்டார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு மணிகண்டன் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த அவரை பெங்களூரில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
35
சொத்து தருவதாக கூறி வழக்கு வாபஸ்
இந்நிலையில் சாந்தினி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கடந்த 2021-ம் ஆண்டு மணிகண்டன் தன்னுடைய ஆட்களை வைத்து எங்களது வீட்டில் பெட்ரோல் பாம் அடித்தார். இந்த வழக்கு தொடர்பாக தி.நகர் முன்னாள் கவுன்சிலர் ராமநாதன் என்பவர் என்னைச் சந்தித்து பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்கப் போகிறார்கள். தன்னுடைய வாழ்வாதாரத்தை கவனித்து கொள்வதாகவும் சொத்துக்கள் தருவதாகவும் கூறி வழக்கை வாபஸ் பெற செய்தார்.
ஆனால், நான் வழக்கை வாபஸ் பெற்ற இரண்டே நாட்களில் மணிகண்டனுடைய அனைத்து போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதிமுக தலைவர் இபிஎஸ்.யிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தேன். பின்னர் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் மணிகண்டன் ஆஜராகவில்லை.
55
கடுமையான மன உளைச்சல்
மணிகண்டனின் வழக்கறிஞர்கள் மகளிர் ஆணைய அதிகாரியையே மிரட்டுகிறார்கள். நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடியால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்.என்னுடைய வழக்கறிஞர்களையும் விலைக்கு வாங்கி விடுகிறார். அதனால் நானே நேரடியாக ஆஜராகியுள்ளேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.