செல்போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. இன்று தமிழகத்தில் 7 மணிநேரம் மின்தடை!

Published : Jan 02, 2026, 07:12 AM IST

Tamilnadu Power Cut: தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோயம்புத்தூர் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் மின் விநியோகத்தை நிறுத்தவுள்ளது. இந்த மின்தடையானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமலில் இருக்கும். 

PREV
14
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

24
மின்தடை ஏற்படும் இடங்கள்

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி 2026 புதிய ஆண்டு பிறந்துள்ள நிலையில் இரண்டாவது நாளில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

34
கோவை

காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

44
உடுமலைப்பேட்டை

உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குவார்ட்டர்ஸ், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டணம், மருள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories