விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!

Published : Dec 29, 2025, 10:19 AM IST

Tamilnadu Power Cut: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவித்துள்ளது. கடலூர், தர்மபுரி, மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பல மணிநேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
19
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினமான செவ்வாய்கிழமை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

29
கடலூர்

கோவை

இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

கடலூர்

நல்லத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, எம் பாரூர், எருமனூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர், பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர், நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வாரகல்பட்டு, எஸ் புதூர், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

39
தர்மபுரி

மதிகோன்பாளையம், கோட்டை, டிபிஐ பஸ்ஸ்டண்ட், பஜார், அண்ணாசாகரம், ஹோல் டிபிஐ, கடகத்தூர், அ.ஜெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, கோம்பை, நூலஹள்ளி, குப்பக்கல்பூர், முக்கால்பூர், முக்கால்பூர் பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

49
கிருஷ்ணகிரி

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி 8 மணி நேரம் கரண்ட் இருக்காது.

59
மதுரை

நரசிங்கம்பட்டி, மாங்குளம், ஆத்தூர், பூசாரிபட்டி, ஏ.வல்லாளபட்டி, சாம்பிராணிப்பட்டி, அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம், திருவாதவூர், இடையபட்டி, ஆமூர், வீபடைப்பு, பூச்சுத்தி, மேலவலவு, எட்டிமங்கலம், செனகரம்பட்டி, புதுசுக்கம்பட்டி, கேசம்பட்டி, பட்டூர், அழகாபுரிபட்டி, தும்பப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

69
கரூர்

தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு உள்ளிட்ட பகுதிகளில் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படும்.

79
தஞ்சாவூர்

திருக்கனூர்பட்டி, அற்புதபுரம், திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.

89
விழுப்புரம்

அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மத்தம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, காரப்பட்டு, செம்மர், கேரமம், வி.பி.நல்லூர், காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், கடகனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

99
கோவூர்

மூகாம்பிகா நகர், சிவசக்தி நகர், தங்கம் அவென்யூ, மகாத்மா காந்தி நகர், சீனிவாச நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்கள் நாளை ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடை ஏற்படப்போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read more Photos on
click me!

Recommended Stories