Pongal Festivel
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14 செவ்வாக்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் வருகிறது.
Tamilnadu Government
இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். ஆகையால் சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
CM Stalin
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் அனுப்பியுள்ள கடிதத்தில்: பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை மூன்று நாள்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாளான 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலை நாளாக உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 18 மற்றும் 19-ம் தேதி ஆகிய இரண்டு நாள்களும் சனி, ஞாயிற்றுக்கிழமையாகும்.
Government Employee
ஜனவரி 17-ம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், தொடர்ந்து விடுமுறைகள் கிடைக்கும். இதனால், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடுதலான நாள்கள் தங்களது ஊர்களில் தங்கும் நிலை நல்ல சூழல் ஏற்படும். எனவே, ஜனவரி 17-ம் தேதியை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Government Employee
அதே நேரத்தில் அரசு மனசு வைத்தால் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் 9 நாள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது பொங்கல் முந்தைய நாளான ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகை்கு அரசு விடுமுறை அளித்து வருகிறது. ஆகையால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது.
School Holiday
அதேபோல் ஜனவரி 11, 12ம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை வந்து விடுகிறது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். அப்படி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
Pongal Holiday
போகி பண்டிகை அல்லது ஜனவரி 17ம் தேதி ஏதாவது ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் எப்படி இருந்தாலும் 6 நாள் விடுமுறை கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.