சென்னை-பஞ்சாப் ஐபிஎல் போட்டியின் போது சூதாட்ட புகார்.? லட்சங்களில் சிக்கிய பணம்- 10 பேருக்கு ஸ்கெட்ச்

Published : May 01, 2025, 03:47 PM IST

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லட்சக்கணக்கில் சூதாட்டம் நடைபெற்றுள்ளது. லோட்டஸ் என்ற ஆன்லைன் செயலி மூலம் பணம் செலுத்தி சூதாட்டம் விளையாடப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

PREV
14
சென்னை-பஞ்சாப் ஐபிஎல் போட்டியின் போது சூதாட்ட புகார்.? லட்சங்களில் சிக்கிய பணம்- 10 பேருக்கு ஸ்கெட்ச்
ஐபிஎல் போட்டி- ரசிகர்கள் உற்சாகம்

உலகத்தில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகளவு கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இதன் காரணமாகவே இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்காக ஐபிஎஸ் போட்டி சூடு பிடித்துள்ளது.

இதன் படி எப்போதும் ராஜாங்கம் செலுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப்பிற்கு செல்ல முடியாமல் திரும்பியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை- பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியை மையமாக வைத்து லட்சக்கணக்கில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

24
சூதாட்ட புகார்

கிரிக்கெட்  ரசிகர்கள், ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 18 வது ஐபிஎல் சீசன் போட்டி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் மீது பணம் செலுத்தி சூதாட்டம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது.  அந்த வகையில் சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் போட்டியில் பணம் செலுத்தி சூதாட்டம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் லோட்டஸ் எனும் ஆன்லைன் செயலி மூலம் இந்த சூதாட்டம் நடைபெற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

34
10 பேரை பிடித்த போலீஸ்

குறிப்பாக பஞ்சாப் அணியினர் விளையாடும் போட்டிகளின் போது, இந்த லோட்டஸ் செயலி மூலம் பணம் செலுத்தி சூதாட்டம் விளையாடுவது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சூதாட்டத்தில் 1100 ரூபாய் முதல் பல லட்சங்களில் ஒருவர் பணம் செலுத்தி விளையாடும் வகையில் சூதாட்ட திட்டங்கள் வகிக்கப்பட்டு பெரிய அளவிலான பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. மேலும் சூதாட்டத்தில் வந்த பணத்தை  சூதாட்ட கும்பல் சுருட்டி இருப்பது தெரியவந்துள்ளது. 

44
19 லட்சம் பறிமுதல்

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முதல் கட்டமாக 10 பேரை பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் இருந்து 19 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமான வரித்துறையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட  பிடிபட்ட 10 நபர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த சூதாட்டத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது.?  என விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Read more Photos on
click me!

Recommended Stories