கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கலெக்டருக்கு ஆபா*ச மெசேஜ்களை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. திமுக தலைவரான கனிமொழி இந்த விவகாரத்தை முதலில் எழுப்பினார். ஆனால், தவெக எம்.எல்.ஏ, கட்சி மற்றும் அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தனர். இதற்கிடையே, வழக்கறிஞர் ஆர். திரிசூல் என்பவர், எம்.எல்.ஏ மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், இந்த விவகாரத்தில் போலீஸுக்கோ, தலைமைச் செயலாளருக்கோ எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மீடியா செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், புகார் வந்தால் மட்டுமே தலையிட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த விவகாரத்தில் புகார் ஏதும் உள்ளதா என கலெக்டரிடம் விசாரித்து பதில் அளிக்கும்படி பப்ளிக் பிராசிகியூட்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமைச் செயலாளரிடமிருந்தும் விளக்கம் பெற நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Kanimozhi Slams Vijay : தவெக எம்.எல்.ஏ விவகாரம்..முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? கனிமொழி சரமாரி கேள்வி