சங்கி குழு பொங்கலில் பராசக்தி டீம்..! ஜனநாயகன் மட்டும் பிளாக்..! திமுகவை போட்டு பொளக்கும் மாணிக்கம் தாகூர்

Published : Jan 14, 2026, 03:11 PM IST

மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்ல பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழு பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

PREV
14
பராசக்தி டீம் சர்ச்சை

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, ‘பராசக்தி’ திரைப்படக் குழு குடும்பத்துடன் விழாவில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

24
சிவகார்த்திகேயன் பொங்கல் விழா

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி அரசியல் குறித்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். தவெக தலைவர் விஜய் “கூட்டணி ஆட்சி” என பேசிவரும் நிலையில், காங்கிரஸ் தரப்பின் நிலைப்பாடுகள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, சில காங்கிரஸ் தலைவர்கள் திமுக ஆட்சிக்கு எதிராகவும் வெளிப்படையாக கருத்து கூறியுள்ளனர். கடந்த 2006-ல் ஏற்பட்ட “பிழை” இந்த முறை நடக்காது என்றும் மாணிக்கம் தாகூர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

34
எல் முருகன் இல்ல நிகழ்ச்சி

இந்நிலையில் ஜனவரி 10 அன்று வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிரான பின்னணியில் உருவானதாக பேசப்படும் படத்தில் நடித்த நடிகர்கள், டெல்லியில் பாஜக சார்ந்த விழாவில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் “படத்தின் கருத்துக்கும் நிகழ்வின் சூழலுக்கும் முரண்பாடு உள்ளதா?” என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

44
மாணிக்கம் தாகூர் ட்வீட்

இந்த சூழலில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது பதிவில், “சங்கி குழு பொங்கலில் பராசக்தி குழு… ஆனா ஜனநாயகன் தடுக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டு தாக்கியுள்ளார். இதன் மூலம் ஒருபுறம் ‘பராசக்தி’ குழு பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், மறுபுறம் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தடை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories