நயினார் செய்த தில்லாலங்கடி வேலை! உண்மையை போட்டு உடைத்த OPS - கூட்டணி முறிவுக்கு இது தான் காரணம்!

Published : Aug 02, 2025, 09:31 PM IST

பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்திக்க ஆர்வப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதனை விரும்பவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

PREV
14
பன்னீர்செல்வம் வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்னே் என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. இது தொடர்பாக உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை.

24
6 முறை தொடர்கொள்ள முயற்சித்தேன்...

நயினார் நாகேந்திரன் அவர்களே ஆறுமுறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால் நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே நயினார் நாகேந்திரனிம் பேச வேண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் நயினார் நாகேந்திரன் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

34
அனுமதி கோரி கடிதம்

இதுனைத் தொடர்ந்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு 24/07/25 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்த கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

44
இனியாவது உண்மையை பேசுங்கள் நயினார்

உண்மையில் நயினார் நாகேந்திரனுக்கு பிரதமரை நான் சந்திக்கவேண்டும் என்ற விருப்பம் இருக்குமேயானால் நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை. இதிலிருந்து நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே பிரதமரை சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது.

நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.

Read more Photos on
click me!

Recommended Stories