மாணவர்களுக்கு குட்நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா? இன்று அறிவிப்பு வெளியாகிறது?

First Published May 26, 2023, 6:42 AM IST

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில் திடீரென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிக்கிறார். 
 

தமிழ்நாட்டில் ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நில நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவுறுத்தியுள்ளன. 

இந்நிலையில், ஜுன் 1ம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயமா? பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்;-  முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என்றார். 

வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு கூறியுள்ளார்.

click me!