குறைந்தது வெங்காயம் விலை.. அதிகரித்தது முருங்கைக்காய், அவரைக்காய் விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

First Published Jan 29, 2024, 7:07 AM IST

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் அவரைக்காய், முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. 
 

onion

வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது,

அவரைக்காய் விலை .?

வாழைப்பூ  25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Latest Videos


Vegetables Price Today

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இஞ்சி விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 180-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ  25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் 40 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

மதுரை கோயிலில் பிரியாணி திருவிழா! 200 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு தடபுடலான அன்னதானம்!

click me!