Vegetables Price List : கிடு, கிடுவென குறைந்த வெங்காயம் விலை.! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை என்ன தெரியுமா.?

First Published Jan 28, 2024, 7:36 AM IST

தக்காளி , வெங்காயம், கத்திரிக்காய்  உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் உள்ளதன் காரணமாக விற்பனை விலையானது சற்று குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தை அதிகளவு மக்கள் வாங்கி செல்கின்றனர். 
 

சரிந்தது வெங்காயம் விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காய ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30க்கும், பீட்ரூட்  40ரூபாய்க்கும்,  உருளைக்கிழங்கு ஒரு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய்  ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

Latest Videos


கத்திரிக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

vegetables

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும்,  வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதையும் படியுங்கள்

வாகன ஓட்டிகளே உஷார்.. சென்னை ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

click me!