கிடு, கிடுவென உயர்ந்த கேரட், முருங்கைக்காய் விலை.! கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்ததா.?

First Published | Jan 24, 2024, 8:02 AM IST

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில், ஒரு சில காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதையடுத்து விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது. 

உருளைக்கிழங்கு விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vegetables Price Koyembedu

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர்  பீன்ஸ் 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது. 

Latest Videos


Vegetable Price Today

கத்திரிக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும்,  கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

vegetables

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும்,  மாங்காய் ஒரு கிலோ 180 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 1 கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

இந்த இரண்டு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி.. இல்லையென்னால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி- மநீம அதிரடி

click me!