உச்சத்தில் முருங்கைக்காய், கேரட், அவரைக்காய் விலை.! கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை என்ன.?

First Published Jan 23, 2024, 8:55 AM IST

காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில், வெண்டைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது அதிகரித்துள்ளது. 
 

சின்ன வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 33 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

Vegetable Price Today

இஞ்சி விலை நிலவரம் என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 180 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,முள்ளங்கி ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

கணவன், மனைவி, தந்தை மற்றும் மகன் இடையே இவ்வளவுக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யாதீங்க..

click me!