Washing Machine: ஹையர் நிறுவனம் அல்ட்ரா வாஷ் ஏர் டெக்னாலஜியுடன் கூடிய புதிய வாஷிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது. 8 வகையான வாஷிங் புரோகிராம்கள், துணிகளில் உள்ள துர்நாற்றத்தை நீக்கும் திறன் மற்றும் 12 மணிநேரம் வரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
ஹையர் நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் (Consumer Electronics & Home Appliances) தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், இந்தியாவிலும் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
26
8 வகையான துணிகளை துவைக்கலாம்
இந்நிலையில் ஹையர் நிறுவனம் புதிய துணி வைக்கும் இயந்திரமான (வாஷிங் மெஷின்) அறிமுகம் செய்துள்ளது. இதில் 8 வகையான துணிகளை துவைக்க முடியும். அதுமட்டுமல்ல ஆடைகளில் வீசும் துர்நாற்றத்தையும் நீக்க முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
36
அல்ட்ரா வாஷ் ஏர் டெக்னாலஜி
மேலும் அல்ட்ரா வாஷ் ஏர் டெக்னாலஜியுடன் கூடிய புதிய துணி துவைக்கும் இயந்திரத்தை ஹையர் அறிமுகம் செய்துள்ளது. இதில், 8 விதமான வாஷிங் புரோகிராம்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், துணிகளின் தன்மை, அதிகப்படியான அழுக்கு போன்றவற்றை பொருத்து 8 வகைகளில் துணிகளை துவைக்க முடியும். இயந்திரத்தின் டிரம்முக்குள் ஃபில்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது, ஆடைகள் துவைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அழுக்குகளை உறிஞ்சி எடுக்கும் வல்லமை கொண்டது.
இந்த வாஷிங் மெஷின் துணிகளைத் துவைக்கும் போது கடல் அலைகளைப் போன்ற பலமடங்கு தீவிரமான சுழற்சிகளை உருவாக்குகிறது. இதனால் துணிகளின் இழைகள் சேதமடையாமல், அவற்றில் உள்ள பிடிவாதமான அழுக்குகள் முழுமையாக நீக்கப்படுகின்றன. மெஷினில் இருக்கும் தண்ணீரின் அளவை நாமே துல்லியமாகக் கண்காணிக்க முடியும். அதற்கு ஏற்ப தேவையான ஆடைகளை மட்டும் உள்ளே போட்டு, சிக்கனமாகத் துவைத்து எடுத்துக்கொள்ளலாம்.
56
பூஞ்சை காளான்கள் முற்றிலும் தடுக்கும்
இதன் ட்ரெம்மிற்குள் தொடர்ச்சியாக நுண் அழுத்தக் காற்று செலுத்தப்படுகிறது. இது மெஷினுக்குள் ஈரப்பதம் தங்குவதைத் தடுத்து, பூஞ்சை காளான்கள் உருவாவதை முற்றிலும் தவிர்க்கிறது.
66
கொள்ளளவு மற்றும் விலை விவரம்
இதில் துவைத்து முடிக்கப்பட்ட ஆடைகள், மெஷினுக்குள்ளேயே இருந்தாலும் சுமார் 12 மணி நேரம் வரை துர்நாற்றமின்றி, அலார்ட் மற்றும் புத்துணர்ச்சியோடு இருக்கும். 6.5 கிலோ (6.5 Kg) கொள்ளளவு கொண்டது. இதற்கு கூடுதல் கொள்ளளவு தேவைப்படுபவர்களுக்காக 10 கிலோ (10 Kg) மாடலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த அதிநவீன வாஷிங் மெஷினின் ஆரம்ப விலை ரூ. 18,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.