திருவண்ணாமலை கலெக்டர் எச்சரிக்கையை மதிக்காத திருநங்கைகள்! நடுங்கும் பக்தர்கள்! நடந்தது என்ன?

First Published | Nov 9, 2024, 2:18 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருநங்கைகள் புதுமணத் தம்பதியைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருஷ்டி சுற்றிய திருநங்கைகள் பணம் கேட்டு தம்பதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் வார விடுமுறை நாட்களில் திருவண்ணாமலை வருகை தந்து கோவிலில் தரிசனம் செய்த பின் கிரிவலம் வருகின்றனர். 

இதையும் படிங்க: TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

இந்நிலையில், ஓம் நமச்சிவாயா என்ற உச்சரித்த படியே பக்தியுடன் கிரிவலம் வரும் பக்தர்களிடம் குறிப்பிட்ட சில பகுதிகளில் திருநங்ககைள் குழுக்களாக நின்று இடையூறு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. காசு கொடுக்காத பக்தர்களை தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது. அதேபோல் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் வாசலில் இதுபோன்று சம்பவம் நடைபெறுகிறது.

Latest Videos


இதனால், கிரிவலம் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒரு வித அச்சத்துடனே செல்வதாக கூறுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருநங்கைகள் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க:  Snake Bite: பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்த தமிழ்நாடு அரசு! எதற்காக? இதனால் என்ன பயன்?

அப்படி இருந்த போதிலும் திருநங்கைகளின் அட்டகாசம் அடங்கவில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு புதுமண தம்பதியை திருநங்கைகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவிலில் இருந்து மாலையுடன் வந்த புதுமண தம்பதியை எலுமிச்சை பழம் கொண்டு திருஷ்டி சுற்றிய திருநங்கைகள் ரூ.1000 கேட்டுள்ளனர். அவர்கள் கொடுக்காததால் எந்த தம்பதியை திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசாரைக்கூட அவர்கள் பொருள்படுத்தாமல் தம்பதியை தாக்கியுள்ளனர்.  மேலும் போலீசாரையும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், கோயிலுக்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!