Tamil Nadu NSS camp guidelines : தமிழகத்தில் நடைபெறவுள்ள 1953 என் எஸ் எஸ் முகாம்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக 1953 என் எஸ் எஸ் முகாம்கள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து இந்த முகாம்களை நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு என் எஸ் எஸ் முகாம்கள் நடைபெற உள்ளன.
1953 இடங்களில் இந்த என் எஸ் எஸ் முகாம்கள் நடைபெற உள்ளன. கடந்த காலங்களில் என் எஸ் எஸ் முகாம்களின் போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
24
பள்ளிகளில் என்எஸ்எஸ் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த பயிற்சி முகாமில் பள்ளி மாணவிகள் 13 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிலையில் என் எஸ் எஸ் முகாம்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார் அதில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
34
பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
பள்ளியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிற்கு மிகாமல் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்
முகாம் இடத்தை தாண்டி வெளியிடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல தடை
பெற்றோர்களின் தடையின்மை சான்றிதழ் முக்கியம்
மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று முகாம்களை நடத்த வேண்டும்.