இனி டிவி வாங்குவதாக இருந்தாலும் அனுமதி தேவை.! அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- அலறும் சங்கங்கள்

Published : Mar 07, 2025, 07:57 AM ISTUpdated : Mar 07, 2025, 01:00 PM IST

தமிழக அரசு அலுவலர் நடத்தை விதிகளில் திருத்தம்! அரசு ஊழியர்கள் பரிசு வாங்கவும், போராட்டத்தில் ஈடுபடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசு ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

PREV
15
இனி டிவி வாங்குவதாக இருந்தாலும் அனுமதி தேவை.! அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- அலறும் சங்கங்கள்

அரசுக்கும் - மக்களுக்கும் பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள் தான். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசுகள் வழங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்  தமிழ்நாடு அரசு அலுவலர் நடத்தை விதி 1973- இல் பல்வேறு திருத்தங்களை செய்து அரசின் மனித வள மேலாண்மைத்துறை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறது. அதில், அரசு அலுவலரோ,அவரது மனைவியோ அல்லது அவர் குடும்பத்தினரோ  25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்களை வாங்கும் போது அரசின் அனுமதி பெற வேண்டும்,

25
அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு

வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது,எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது,    அரசுக்கு எதிராக கருத்துக்களை எந்த வகையிலும் தெரிவிக்க கூடாது,  அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டிய இடத்திலும் கூட்டம் போன்றவை நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவர் அமிர்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தற்பொழுது தேவையற்ற திருத்தத்தை  அரசு வெளியிட்டு இருக்கிறது என்பதை முழுமையாக உணர்கிறோம்.

35
டிவி வாங்க அனுமதி பெறனும்

அரசு அலுவலரோ,அவரது மனைவியோ அல்லது அவர் குடும்பத்தினரோ  25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்களை வாங்கும் போது அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத திட்டம். ஏனெனில் தற்போது அத்தியாவசியமான பொருட்கள் கூட உதாரணமாக ஒரு வண்ணத் தொலைக்காட்சியை புதியதாக வாங்கினாலே 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தொகையை செலுத்த வேண்டி உள்ளது. காரணம் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவு உள்ளது.ஒரு தொலைக்காட்சி பெட்டி வாங்குவதற்கு அரசின் அனுமதி என்பது சாத்தியமா ? என்பதை பற்றி யோசிக்க வேண்டிய நிலைமை.

45
போராட்டத்தில் ஈடுபட கூடாது

அரசின் அனுமதிக்கு அனுப்பி விட்டு வருடக்கணக்கில் எதிர்பார்த்து காத்துக்கிடப்பது என்பது மிகவும் கடினமானது ஆகும். திமுக அரசு  பல்வேறு வாக்குறுகளை அளித்து தேர்தலில் வெற்றி பெற்று ஏறக்குறைய 45 மாதங்களை கடந்த பிறகும் பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிலுவையாக இருக்கின்ற நேரத்தில்,

  பல்வேறு சங்கங்களும் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகின்ற இந்நேரத்தில் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது,எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது என்பது போன்ற மோசமான திருத்தத்தை வெளியிட்டிருக்கிறது வருத்தமானது மட்டுமின்றி  தேவையற்ற நிகழ்வாகவும் கருதுகின்றோம்.

55
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா

அரசுக்கு எதிராக கருத்துக்களை எந்த வகையிலும் தெரிவிக்க கூடாது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத விஷயம். அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டிய இடத்திலும் கூட்டம் போன்றவை நடத்தக்கூடாது எனவும்,அதில் தலைமை தாங்கவோ,உரையாற்றவோ கூடாது என்றால் எதிர்கருத்துகளை எப்படி தெரிவிப்பது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது போன்றல்லவா இருக்கிறது. எனவே,இதை அரசு மறுபரிசீலனை செய்து தேவையற்ற விதி திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என அமிர்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories