எதுக்கு இந்த முடிவை எடுத்தார் தெரியல! ஓபிஎஸ் ஓகே சொன்னால்! இதை செய்ய நான் ரெடி! நயினார் நாகேந்திரன்!

Published : Aug 01, 2025, 04:10 PM IST

பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஓபிஎஸ் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.

PREV
14

அரசியல் நிரந்தர நண்பரும் இல்ல, எதிரியும் இல்லை என்பார்கள். அதற்கு ஏற்றார் போல தர்மயுத்தம் நடத்தியதே பாஜக சொல்லி தான் நடத்தியதாக ஓபிஎஸ் கூறியது மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு அளிக்கக் கோரி ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில், கடைசி வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பாஜக தரப்பில் தனக்கான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று ஓபிஎஸ் உணர்ந்தார்.

24

மேலும் தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேற வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியல் அரங்கை அதிர விட்டார். அதுமட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய கையோடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அடுத்தடுத்து மூன்று முறை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் திமுக கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி பாஜகவை அதிர்ச்சி அடைய செய்தது.

34

இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளார். ஓபிஎஸ் வெளியேறியது சொந்தப் பிரச்சனையா அல்லது வேறு காரணமா என தெரியவில்லை. கூட்டணியில் இருந்து விலகியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். அவர் என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு செய்திருப்பேன்.

44

தொகுதிப் பிரச்னைக்காக ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சரை சந்தித்திருக்கலாம். ஒரு எம்.எல்.ஏ ஆக நானே முதலமைச்சரை சந்திக்க முடியும். ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories