கணவர் ரொம்ப நல்லவர்! என் சாவுக்கு இவங்க தான் காரணம்! 6 மாத குழந்தையுடன் தாய்! கலங்க வைக்கும் கடைசி நிமிடம்!

Published : Feb 06, 2026, 02:08 PM IST

Women Suicide: வேதாரண்யம் அருகே மாமியார் கொடுமை தாங்காமல், காவியா என்ற 20 வயது பெண் தனது 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

PREV
14
மாமியார் கொடுமை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (33) கூட்டுறவு கடன் சங்கத்தின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காவியா (20). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. காவியா தனது கணவனுடன் வீட்டில் வசித்து வந்தார். காவியாவின் மாமியார் செந்தமிழ்செல்வி அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மாமனார் பழனித்துறை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இந்நிலையில் மாமியார், மாமனாரின் தினத்தோறும் மருமகளிடம் சண்டையிட்டது மட்டுமல்லாமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் பொறுமை இழந்த கணவர் சிவபாலன் தனது மனைவி காவியாவை அருகில் உள்ள அவரது தாயார் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.

24
குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

இந்நிலையில் தாயார் வீட்டில் தங்கி இருந்த காவியா மனவேதனையில் இருந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவு தனது 6 மாத குழந்தையை துப்பட்டாவால் தனது வயிற்றில் கட்டி கொண்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காவியாவை காணவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

34
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

அப்போது கிணற்றில் காவியா மற்றும் குழந்தை இருவரும் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

44
மாமியார் கைது

அப்போது காவியா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் தனது சாவுக்கு காரணம் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் தான் காரணம். தனது கணவர் நல்லவர் அவர் என் சாவுக்கு காரணம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து போலீசார் மாமியார் செந்தமிழ்ச்செல்வி கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாமனார் பழனிதுரையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாமியார் கொடுமையால் 6 மாத குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories