செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில்: பாட்டாளிகளுக்கு பாடுபடுவதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கியவர் ராமதாஸ். அவர் பாட்டாளிகளுக்காக பாடுபட்டிருக்கிறார். ஆனால், இப்போது அப்பா தந்தது எல்லாவற்றையும் எடுத்து அவரையே ஓரம் கட்டுகிறார்.
24
அப்பாவுக்கு துரோகம் செய்த அன்புமணி
அப்பாவுக்கு துரோகம் செய்தவனெல்லாம் நம்மை பற்றி விமர்சிக்கிறான் என அன்புமணியை ஒருமையில் பேசி விமர்சித்தார். பாட்டாளி மக்கள் கட்சிக்காரர்கள் யாருமே முன்னேரவில்லை. ஒரு குடும்பம் தான் முன்னேறி இருக்கிறது. அந்த ஐயா குடும்பம் மட்டும்தான் முன்னேறி இருக்கிறது என்றார். இதெல்லாம் பாட்டாளிகளுக்கு தெரியும். அதனால் வரும் தேர்தலில் மக்கள் அவரை ஓரங்கட்டுவர்.
34
தவெக தலைவர் மீது விமர்சனம்
சினிமாவில் கஞ்சா சரக்கு குடித்து ஆட்டம் போட்டவர் இன்று அரசியல் கட்சி தொடங்கி ஆட்டம் போடுகிறார். அவரை புரிந்துகொள்ள வேண்டியது அவருடைய ரசிகர்கள் தான். நம்பை தீய சக்தி என்பவர்களை எல்லாம் அரசியலில் இருந்தும் சினிமாவில் இருந்தும் மக்கள் அடித்து விரட்டுங்கள் என்றார்.
வடக்கே உள்ளவர்கள் இந்தி பேசுவதால் இந்தியை மட்டும் அவர்கள் படிக்கிறார்கள். இந்த காரணத்தால் வேலை வாய்ப்பு இல்லாமல் கட்டிட தொழிலாளியாக, டேபிள் துரைப்பவர்களாக, பானி பூரி விற்பவர்களாக தமிழகத்துக்கு வருகிறார்கள். நம்முடைய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்கள். வெளிநாடுகளில் சென்று கோடி கோடியாய் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏனெனில், இரு மொழிக் கொள்கையில் ஆங்கிலம் படித்ததுதான் காரணம். எல்லா கிராமத்தை சார்ந்தவர்களும் வெளிநாடு சென்று வேலைவாய்ப்பு பெறக்கூடிய கம்ப்யூட்டர் படிக்கும் வாய்ப்பை கலைஞர் உருவாக்கி கொடுத்திருக்கிறார்என்று பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.