பெரியார் சர்ச்சை ; உடைகிறது நாம் தமிழர் கட்சி.? சீமானுக்கு எதிராக சீறிய ஒருங்கிணைப்பாளர்

First Published | Jan 12, 2025, 2:08 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்தான சர்ச்சைக்குரிய கருத்துகளால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன், சீமானின் கருத்துக்கள் இந்துத்துவா சக்திகளுக்கு உதவுவதாகவும், தமிழ் தேசியத்திற்கு பாதகமாகவும் இருக்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென தந்தை பெரியார் தொடர்பாக தொடர்ந்து அவதூறான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் சீமான் மீது தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்தநிலையில் சீமானின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன் வெளியிட்டுள்ள  எக்ஸ் தள பதிவில்,
 

திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது! ஆரிய வைதிக பிராமண, இந்துத்துவாவை, இந்தியை, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியர்களின் முதல் கடமை! பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இதுதான் நோக்கம். நமது உயிர் மூச்சான தமிழ் ஈழத்தையும், தலைவர் மேதகுவையும், தமிழை ஆட்சி மொழியாக வழிபாட்டுமொழியாக வழக்காடு மொழியாக, ஏற்றுக் கொள்கிறார்கள், இந்துத்துவா வாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களா?அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்,

Tap to resize

Seeman

இந்துத்துவாதிகள் எதிர்க்கிறார்கள், தேசிய கல்விக் கொள்கையை பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் எதிர்கிறார்கள்!இந்துத்துவாவாதிகள் தினிக் கிறார்கள், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்எஸ்எஸ் பசாக தினிக்கிறது, பெரியாரியவாதிகள் எதிர்க்கிறார்கள், திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழையும், தமிழர்களையையும் அழித்து வந்தது ஆரியம் தான். நாம் தமிழர் கட்சியை துவக்கியதும், அன்றைக்கு அரவனைத்தவர்களும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிஸட்டுகள் தான்,

திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே  ஒழிய,நாம் தமிழரின் ஒட்டு மொத்த கருத்தல்ல, ஆரியம்தான் தமிழனின் முதல் பகை, அண்ணன் சீமானின் கருத்து ஆர்எஸ்எஸ், பாசக, சங்கபரிவார் அமைப்புகளுங்கு துணை போகுமே ஒழிய ஒருபோதும் தமிழ் தேசியம் வெல்ல உதவாது,  தமிழ் தேசியமானது தமிழ் பேசும் சமூகத்தின் அக முரண்பாடுகளைத் தீர்த்து அதை சரியன அரசியல் பாதையில் அணி திரட்டக்கூடிய ஒரு கருத்தியலாக வளர்த்தெடுக்கப்படாமல் அதன் பாட்டிலேயே விடப்படுமானால் சந்தர்ப்பாவாதிகளின் நுனி நாவால் புரட்டப்படும்

ஒரு வெற்றுச் சொற்றொடராகவே அது இருக்குமாயின் எதிர்காலத்தில் மீண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படபோகும் இன அழிப்புப்போர் அச்சுறுத்தல் கூட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவதற்கு போதாதாகிவிடும்” ("தராக்கி சிவராம்" தலைவர் அவர்களால் "மா மனிதர் என்று பட்டம் சூட்டப்பட்டவர்)  அண்ணன் சீமான் அவர்கள் திராவிடத்தையும், பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகமால் நட்பு முரணோடு கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல காலத்திற்கு ஏற்றார்போல் வேலைத்திட்டத்தை தயார் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!