நான் உடம்பைக் காட்டி மயக்க வரல..! மிஸ் சவுத் இந்தியா சேலம் ப்ரீத்தி அதிரடி பேட்டி

Published : Jul 23, 2025, 01:58 PM IST

மிஸ் சவுத் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற சேலத்தை சேர்ந்த ப்ரீத்தி ராம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

PREV
14
Miss South India Preethy Ram

இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் டிரெண்டான ஒரு சேலத்து பெண்ணை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அந்த வீடியோவின் தொடக்கத்தில் சேலை அணிந்துகொண்டு பக்கா ஹோம்லி பெண்ணாக காட்சியளிக்கும் ஒருவர், அடுத்த பிரேமிலேயே பாடி பில்டிங் போட்டியில் கலந்துகொண்டு மேடையில் பிகினி உடையணிந்து போஸ் கொடுப்பார். அதில் அவர் வெற்றிபெற்று கோப்பையை கையில் வாங்கும் தருணத்தை அவரது கணவர் கீழே நின்று கையில் குழந்தையோடு விசிலடித்து ரசிப்பார். அந்த வைரல் பெண் வேறுயாருமில்லை சேலத்தை சேர்ந்த ப்ரீத்தி ராம் என்பவர் தான்.

24
யார் இந்த ப்ரீத்தி ராம்?

சேலத்தை சேர்ந்த ப்ரீத்தி ராம் இன்ஸ்டாவில் படு வைரல் ஆனதற்கு காரணம் அவரின் பாடி பில்டிங் வீடியோ தான். அவருக்கு பள்ளி, கல்லூரி காலங்களிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் இருந்ததாம். ஆனால் திருமணத்துக்கு பின்னர் அதையெல்லாம் விட்டுவிட்டு இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார். பின்னர் ப்ரீத்தியின் கணவர் சொந்தமாக ஜிம் தொடங்கியதை அடுத்து அவருக்கு பாடி பில்டிங் மீது ஆர்வம் வந்திருக்கிறது. கணவரும் முழு சுதந்திரம் கொடுத்தது மட்டுமின்றி அவரை வழிநடத்திச் சென்று போட்டிகளிலும் பங்கேற்க வைத்திருக்கிறார்.

34
ப்ரீத்தி சாதித்தது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லாத்துறைகளிலும் சாதிக்கிறார்கள். அவர்கள் ஒரு சில துறைகளில் நுழையும்போது நிறைய எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். ஆனால் ப்ரீத்தி தனக்கு குடும்பத்தினர் தரப்பிலும், நட்பு வட்டாரத்திலும் எந்தவித எதிர்ப்பும் வரவில்லை என கூறி இருக்கிறார். அனைவருமே தன்னை ஊக்கப்படுத்தினார்கள் என்று தெரிவித்த ப்ரீத்தி. நாங்கள் ஜிம் வைத்து நடத்தி வருவதால் அனைவருமே அதை ஒரு இன்ஸ்பிரேஷனாக தான் எடுத்திருக்கிறார்கள். என்னைப்பார்த்து ஏராளமான பெண்கள் ஜிம்மிற்கு தயக்கமின்றி வரத் தொடங்கி இருக்கிறார்கள் என கூறி உள்ளார் ப்ரீத்தி.

44
பிகினி பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ப்ரீத்தி

எல்லா விளையாட்டிற்கும் ஒரு டிரஸ் கோடு இருப்பதை போல் பாடி பில்டிங்குடைய டிரெஸ் கோடு பிகினி உடை தான். நாங்க வேண்டுமென்றே பிகினி அணியவில்லை. பெண்களை தவறாக பார்க்கும்போது தான் பிகினி என்பது பிரச்சனையாக தெரியும் என நான் நினைக்கிறேன். பாடி பில்டிங் என்பது உடம்பு எவ்வளவு பிட்டாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் ஒரு விளையாட்டு. அதுக்கான ஒரு ஆடையாக தான் பிகினியை நான் பார்க்கின்றேன். நாங்க அங்க போய் உடம்ப காட்டி மயக்குவதற்காக அப்படி செய்யவில்லை. அப்படி ஆடையை பற்றி கமெண்ட் செய்பவர்களுக்கு பாடி பில்டிங் பற்றிய புரிதல் இருக்காது என தன்னைப்பற்றி வரும் நெகடிவ் கமெண்ட்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ப்ரீத்தி.

Read more Photos on
click me!

Recommended Stories