Tamil Nadu flood : வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டம்.. மீட்பு பணியில் பம்பரமாக சுற்றி வரும் உதயநிதி!!

First Published Dec 20, 2023, 12:56 PM IST

தூத்துக்குடி, நெல்லையில் கன மழையால் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் வகையில், தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமைச்சர் உதயநிதி பல்வேறு இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வகையில்  தீவிவரமாக களத்தில் இறங்கி பணி மேற்கொண்டு வருகிறார்.  

வரலாறு காணாத மழை

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் காயல்பட்டிணத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்து மக்களை மூழ்கடித்தது. இந்த பேய் மழையால் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அனைத்து பொருட்களையும் நாசம் செய்தது. விவசாய பயிர்கள் முற்றிலுமாக அழிந்துள்ளது.

தமிழக அரசின் மீட்பு நடவடிக்கை

இதனால் மக்கள் வாழ்வதற்கு வழியில்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில், தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தென் மாவட்டங்களை மீட்போம் என முதலமைச்சர் உறுதி அளித்து தமிழக அரசால் முடிந்த உதவிகளை மேற்கொண்டு வருகிறது.

Latest Videos


களத்தில் இறங்கிய உதயநிதி

அமைச்சர்கள் குழுவை தென் மாவட்டங்களுக்கு அனுப்பி மக்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் மழையானது கொட்டிக்கொண்டிரும் போதே அமைச்சர் உதயநிதியை தென் மாவட்டங்களுக்கு அனுப்பி நிவராண மற்றும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டது. அதன் படி  பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவினை வழங்கிய உதயநிதி, வீடுகளை சூழ்ந்துள்ள நீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

வெள்ளப் பகுதியில் உதயநிதி

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பையும் ஆய்வு செய்தார்.  தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அந்தப்பகுதிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரிடம் அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்த்தோடு,

 வெள்ளம் காரணமாக சிகிச்சை தடைபடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவமனை பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.  மேலும், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிற போதும், சிகிச்சை முடிந்து திரும்புகிற போதும் அவர்கள் வெள்ள நீரில் சிக்காமல் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் படகினை வைத்திருக்கும்படி அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். 

மீட்பு பணி- அதிகாரிகளுக்கு அவசர உத்தவு

மேலும் வரலாறு காணாத கனமழை காரணமாக, வெள்ளம் சூழ்ந்துள்ள முத்தாலம்மன் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை மீட்கின்ற பணிகளையும் துரிதப்படுத்திய அவர்,  நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிப்போருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என  அதிகாரிகள் - அலுவலர்களிடம் எடுத்துரைத்தார்.  தூத்துக்குடி  அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் வெள்ளம்  சூழ்ந்த பகுதியை பார்வையிட்டு, தண்ணீரை அப்புறப்புப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

மேலும் கன மழை பாதிப்பால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிராம மக்கள் 200 பேர் அங்குள்ள மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மக்களை சந்தித்து அவர்கள் ஊரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கேட்டறிந்ததோடு,தேவையான உதவிகளை வழங்கவும் அறிவுறுத்தினார். இதே போல நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்கும் வகையில் பணிகளை துரிதப்படுத்தினார். 

இதையும் படியுங்கள்

வீட்டை சூழ்ந்த வெள்ளம்... 3 நாட்களாக சிக்கி தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்- மீட்ட காவல்துறை

click me!