கன மழை வெள்ள பாதிப்பால் காய்கறிகளின் விலை உயர்ந்ததா.? கோயம்பேட்டில் தக்காளி, வெங்காயம் விலை நிலவரம் என்ன.?

First Published Dec 20, 2023, 8:03 AM IST

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகிறது.
 

காய்கறி விலை என்ன.?

கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 33 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

முட்டைக்கோஸ் விலை நிலவரம்

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை 100 கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

vegetable price hike

மாங்காய் விலை என்ன.?

புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும்,  இஞ்சி ஒரு கிலோ 80 முதல் 250 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பயணிகள் சென்னை செல்ல ஏற்பாடு

click me!