காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுமா.? தமிழகத்தில் எந்த, எந்த மாவட்டத்தில் மழை - வானிலை மையம் அலர்ட்

First Published | Nov 14, 2023, 1:50 PM IST

வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவித்த வானிலை மையம், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக  இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. 
 

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில் எந்த எந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறுகையில், தென்கிழக்கு வங்க கடலில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மத்திய மேற்கு வங்க கடல் மற்றும்ஆந்திர கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.
 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறும்

இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 16ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து வட மேற்கு வங்க கடலில் ஒரிசா கடல் பகுதியில் நிலவக்கூடும் என தெரிவித்தார். மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் மற்றும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடுர புதுச்சேரிர காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

Tap to resize

Tamilnadu Rains

மிக கன மழை எச்சரிக்கை

7 இடங்களில் மிக கனமழையும் 31 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் வேதாரணியத்தில் 17 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அடுத்த வரும் இரு தினங்களுக்குள் தமிழக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

heavy rain

எந்த மாவட்டத்தில் கன மழை

கனமழையை பொருத்தவரை அடுத்தவரும் 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மயிலாடுதுறை, கடலூர் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் திருச்சி, புதுக்கோட்டை ஆகிய  மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புயலாக மாற வாய்ப்பா.?

மன்னார் வளைகுடா,குமரி கடல் மற்றும்  தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்க கடல்,  ஆந்திர கடல் பகுதிகளில் இன்று முதல் 16ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ப்படுவதாக தெரிவித்தார். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். தற்போதுள்ள சூழ்நிலையில் புயலாக மாற வாய்ப்பில்லை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தான் மாறும் எனவும் பாலசந்திரன் தெரிவித்தார் 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு தொடரும் கன மழை... 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அவரச கடிதம்

Latest Videos

click me!