School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மார்ச் 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு!

Published : Feb 25, 2025, 04:14 PM ISTUpdated : Feb 25, 2025, 04:15 PM IST

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15
School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மார்ச் 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு!
Melmalayanur Angalamman temple

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சபம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா பிப்ரவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி மயானக்கொள்ளை விழாவும், மார்ச் 02-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. 

25
Chariot festival

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மார்ச் 04ம் தேதி செவ்வாய்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட பக்தர்களின் வசதிக்காக மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மாணவர்கள் ஜாக்பாட்! பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! முழு விவரம் இதோ !

35
Local Holiday

இதுகுறித்து  விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்ச் 04ம் தேதியன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

45
Government Employee

மேற்படி, தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

 

 

55
School Holiday

மேலும், மாணவ, மாணவியர்களுக்கு மார்ச் அன்று தேர்வுகள் நடைபெறத் தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories