School Student: மாணவர்களுக்கு மதிய உணவு சீருடை வேண்டுமா? அப்படினா இது ரொம்ப முக்கியம்! பள்ளிக்கல்வித்துறை!

First Published | Oct 12, 2024, 1:59 PM IST

Government school students: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் சீருடை வழங்குவது தொடர்பாக பெற்றோரின் ஒப்புதலைப் பெற பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டிற்கான இந்த விவரங்களை அக்டோபர் 18ம் தேதிக்குள் சேகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் நல பள்ளிகள் என அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி சத்துணவு மையங்கள் மூலம் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஆண்டு தோறும் அரசு சார்பில் பள்ளி சீருடைகளும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: TN Transport Department: சூப்பர் அறிவிப்பு! தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இவங்களுக்கு எல்லாம் இலவசம்!

இந்நிலையில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் சத்துணவு ஒப்புதல் கடிதம் பெற்று அரசின் கவனத்திற்கு கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Latest Videos


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்:  2024-25ம் கல்வியாண்டில் அரசு நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கள்ளர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு மற்றும் சீருடை தேவை குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பள்ளி வாரியாக உரிய விவரங்களை பதிவு செய்து அனுப்பி வைத்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இதையும் படிங்க:  Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட துணை முதல்வர் உதயநிதி!

மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களிடம் இப்பொருள்சார்ந்து விருப்பம் குறித்து ஏற்கனவே கருத்துக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் விடுபட்ட பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று அவ்விவரங்களை அக்டோபர் 18ம் தேதிக்குள் நிறைவு செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

click me!