மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகும் கனமழை! பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வானிலை மையம்!

First Published | Dec 7, 2024, 4:01 PM IST

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும்.

Cyclone Fengal

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றதை அடுத்து பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் வானிலை அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. 

Chennai Meteorological Department

அதாவது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 8.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அதேபோல் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Tap to resize

Heavy Rain

இதன் காரணமாக இன்று முதல் நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது  என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: Pongal Gift: பொங்கலுக்கு ரூ.2,000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tamilnadu Heavy Rain

குறிப்பாக 11ம் தேதி முதல் மழை தொடங்க உள்ளது. கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Rain News

12ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர். நஞ்சாவூர், புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. 

இதையும் படிங்க:  School Teacher: ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ரூல்ஸ்! இனி விடுமுறை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

Chennai Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Latest Videos

click me!