டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு

First Published | Nov 19, 2024, 7:05 AM IST

டிசம்பர் மாதத்தில் சனி, ஞாயிறு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை என மொத்ததமாக 14 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது. இந்தநிலையில் கூடுதல் விடுமுறையாக டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School holiday

விடுமுறை - மாணவர்கள் கொண்டாட்டம்

மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறையானது கொட்டிக்கிடந்தது. காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி என ஒரே மாதத்தில் கூடுதலாக 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது.

இது மட்டுமில்லாமல் தொடர் விடுமுறைகளும் ஏராளம் வந்தது.  நவம்பர் மாதம் விடுமுறை கிடைக்குமா என காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த வகையில் ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை மட்டுமே கிடைத்தது.

school holiday

டிசம்பர் மாத விடுமுறை

இந்தநிலையில் டிசம்பர் மாதத்தில் சனி, ஞாயிறு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை என மொத்ததமாக 14 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது. எனவே கூடுதல் விடுமுறை கிடைக்குமா என தவித்த மாணவர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் அந்த வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

thoothukudi

சவேரியார் தேவாலய திருவிழா

உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என வரலாற்றுச் சிறப்புகளுடன் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயமாகும். இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் துவங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும். அந்த வகையில் டிசம்பர் 3ஆம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெறும். இதனையடுத்து ஆண்டு தோறும் உள்ளூர் விடுமுறை விடப்படும். 
 

கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிசம்பர் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி , அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும்,அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என கூறியுள்ளார். மேலும்  டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 14-இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவித்துள்ளார்

Latest Videos

click me!