புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் அடைப்பு.!! எப்போ தெரியுமா.? மது பிரியர்களுக்கு ஷாக் தகவல்

First Published Jul 9, 2024, 8:39 AM IST

மதுபான பிரியர்களுக்கு ஷாக் தகவலை அளிக்கும் வகையில் புதுச்சேரி கலால் துறை அனைத்து வகை மதுபானக்கடைகளை 3 நாட்களுக்கு அடைக்க உத்தரவிட்டுள்ளது. 
 

vikravandi by election candidate

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து அந்த தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக- பாமக- நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் களத்தில் போட்டியிடுகிறது. கடந்த 10 நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. நேற்று மாலையோடு பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில் நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.   

இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கொடுக்கும் தமிழக அரசு! உடனே அப்ளை பண்ணுங்க ப்ரோ!
 

விக்கிரவாண்டியில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

தமிழகத்தில் விக்கிரவாண்டி தேர்தலானது நாளைய தினம் நடைபெறவுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும் வகையில்  நேற்று மாலை 6 மணி முதல் நாளை வரை 3 நாட்களுக்கு மதுபானக்கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அதே நேரத்தில் மதுபான விலை குறைவாக இருப்பதன் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான மதுப்பிரியர்கள் புதுச்சேரிக்கு வருவார்கள். இதுவே புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய வருவாய் கிடைக்க முக்கிய காரணமாக உள்ளது. 
 

Latest Videos


புதுச்சேரியில் மதுபான கடைகள் அடைப்பு

இந்தநிலையில் மதுப்பிரியர்களுக்கு ஷாக் தகவலை புதுச்சேரி மாநில கலால் துறை அறிவித்துள்ளது. விக்கிரவாண்டியை ஒட்டியுள்ள புதுச்சேரியில் உள்ள மதுபானக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,  தமிழ்நாடு - புதுச்சேரி எல்லையில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட அனைத்து வகை மதுபான கடைகளும் அடைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. 

Vegetable Price : மீண்டும் குறைந்த தக்காளி விலை.! ஒரு கிலோ வெங்காயம், இஞ்சி, பீன்ஸ் விலை என்ன தெரியுமா.?

3 நாட்கள் அடைப்பு

நேற்று முதல் தேர்தல் நடைபெறும் நாளான நாளை 10ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு இப்பகுதியில் உள்ள மதுபான கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று மாலை முதல் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளுத. இதே போல வாக்கு எண்ணிக்கை நாளான 13ஆம் தேதியும், இதே போன்று மதுபானக்கடைகள் அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் ஷாக் அடைந்துள்ளனர். 

click me!