ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் சொல்லிட்டு 1000 புதிய பார்களுக்கு உரிமம் வழங்குவதா? வானதி சீனிவாசன்!

Published : Mar 07, 2025, 07:57 AM ISTUpdated : Mar 07, 2025, 08:02 AM IST

திமுக அரசு டாஸ்மாக் கடைகளை மூடும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 1000 புதிய பார்களுக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளார்.

PREV
16
ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் சொல்லிட்டு 1000 புதிய பார்களுக்கு உரிமம் வழங்குவதா? வானதி சீனிவாசன்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு எடுத்து நடத்தி வருகிறது. மொத்தம் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசு இயந்திரமே இதில் வரும் வருமானத்தில் தான் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என கூறிவிட்டு, 1000 புதிய பார்களுக்கு உரிமம் வழங்குவதா? பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டுமானால் மது, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

26
Vanathi Srinivasan

இதுகுறித்து, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அதற்கு நேர் எதிராக மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

36
TASMAC

படிப்படியாக மதுக்கடைகளை மூடும் வாக்குறுதி என்ன ஆயிற்று என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களும் கேள்வி கேட்க தொடங்கியதால், 500 டாஸ்மாக் மதுக்கடைகளை திமுக அரசு மூடியது. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடியிருக்கும் நேரங்களில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதை திமுக அரசும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை.

இதையும் படிங்க: அதிர்ச்சி! தலைநகர் சென்னையை காப்பாத்துங்க முதல்வரே! அலறும் வானதி சீனிவாசன்!

46
TASMAC

இப்படி தமிழ்நாட்டில் எங்கும் மது நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில், அதிகம் மது விற்பனையாகும் இடங்களில், FL2 எனப்படும் சுமார் 1,000 தனியார் பார்களை திறக்க திமுக அரது அனுமதி வழங்கியுள்ளது. இந்த பார்களுக்கு டாஸ்மாக்தான் மதுபானங்களை விநியோகம் செய்கிறது. டாஸ்மாக் செயல்படும் நேரத்தைவிட FL2 பார்கள் செயல்பட கூடுதலாக இரண்டு மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

56
TASMAC Bar

தனியுரிமை பெற்ற கிளப்புகளின் உறுப்பினர்கள் மது அருந்த மட்டுமே FL2 உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், 1000 பார்களுக்கு FL2 உரிமம் வழங்குவதால், கிளப் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, யார் வேண்டுமானாலும் இந்த பார்களில் மதுபானங்களை வாங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகி விட்டது. இதற்கு டாஸ்மாக் மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களே காரணம். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டுமானால், மது, போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

இதையும் படிங்க: இனியும் இதெல்லாம் இங்கே வேலைக்கு ஆகாது முதல்வரே? தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்! வானதி சீனிவாசன் ஆவேசம்!

66
DMK Government

ஆனால், மது விற்பனை எப்படி அதிகரிக்கலாம் என யோசித்து, யோசித்து திமுக அரசு செயல்படுகிறது. எனவே, 1000 பார்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு 1,000 கடைகளை குறைத்து ஐந்து ஆண்டுகளில் முழு மதுவிலக்கை கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories