ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.! KYC-ஐ அப்டேட் செய்து விட்டீர்களா.? இதோ கடைசி சான்ஸ்

Published : Nov 21, 2024, 01:34 PM ISTUpdated : Nov 21, 2024, 01:37 PM IST

மத்திய அரசின் ரேஷன் திட்டத்தின் கீழ், இலவச அரிசி, கோதுமை போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் போலியான் ரேஷன் கார்டுகளை நீக்கும் வகையில் ரேஷன் கார்டு உள்ளவர்கள் eKYC-ஐ அப்டேட் செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 31க்குள் eKYC செய்யப்படாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
19
ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.! KYC-ஐ அப்டேட் செய்து விட்டீர்களா.? இதோ கடைசி சான்ஸ்
ரேஷன் கார்டு திட்டம்

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் திட்டத்தின் கீழ்  அடிப்படை உணவுக்காக போராடுபவர்களைக் கருத்தில் கொண்டு  இலவசமாக அரிசி, கோதுமை போன்றவற்றை வழங்கி வருகிறது. 

29
ரேஷன் கார்டு தகுதி

ஏழை, எளிய மக்களின் நிலையைப்பற்றி மத்திய அரசு தொடர்ந்து சிந்திக்கிறது, அந்த வகையில் உண்மையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் சரியான வகையில் கிடைக்காலம் போலியான குடும்ப அட்டை மூலம் பொருட்கள் கள்ளத்தனமாக விற்கப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு  ஒவ்வொரு தனிநபரும் ரேஷன் கார்டு பெற குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும். eKYC முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

39
eKYC காலக்கெடு

eKYC (ரேஷன் கார்டு) முடிக்கப்படாவிட்டால், பெயர் ரேஷன் திட்டத்திலிருந்து நீக்கப்படலாம். இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் eKYC சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

49
காலக்கெடு நீட்டிப்பு இல்லை

மத்திய அரசு ஏற்கனவே இந்த காலக்கெடுவை இரண்டு முறை நீட்டித்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

59
ரேஷன் கார்டு நிலை

இன்னும் தங்கள் eKYC-ஐ முடிக்காதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டு திட்டத்திலிருந்து நீக்கப்படும். எனவே உங்கள் ரேஷன் கார்டில் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை எளிதாக பார்க்கலாம். 

69
ஆன்லைன் சரிபார்ப்பு

ரேஷன் கார்டின் நிலையை வீட்டிலிருந்தே ஆன்லைனில் சரிபார்க்கலாம். சரிபார்க்க, தேசிய உணவுப் பாதுகாப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

79
ரேஷன் கார்டு தகவல்

உங்கள் ரேஷன் கார்டைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தொடர்புடைய தகவல்களை பதிவு செய்து ரேஷன் கார்டு நிலையைச் சரிபார்க்கலாம்.

89
போலி ரேஷன் கார்டுகள்

ரேஷன் திட்டத்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இதுவே ஒரே வழி. பலர் போலி ஆவணங்கள் மற்றும் தகவல்கள் மூலம்  ரேஷன் கார்டுகளை உருவாக்கி கள்ளத்தனமாக உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

99
ரேஷன் கார்டு ரத்து

இந்தநிலையில் ஏற்கனவே பலரின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும் பணி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சரியான தகவல்களைக் கொண்டவர்களின் ரேஷன் கார்டுகள் ஒருபோதும் ரத்து செய்யப்படாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories