திமுக முக்கிய பிரமுகர் நீக்கம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி! என்ன காரணம் தெரியுமா?

Published : Feb 09, 2025, 12:54 PM IST

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, திமுக பிரமுகர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

PREV
13
திமுக முக்கிய பிரமுகர் நீக்கம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி! என்ன காரணம் தெரியுமா?
திமுக முக்கிய பிரமுகர் நீக்கம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி! என்ன காரணம் தெரியுமா?

திமுகவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் நிர்வாகிகள் மீது அக்கட்சியின் தலைமை அவ்வப்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கிருஷ்ணகிரியில், காந்தி சாலையில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு ஆணையராக கிருஷ்ணமூர்த்தி பணியாற்றி வருகிறார். நகராட்சி தலைவராக பரிதா நவாப் இருக்கிறார். இவரது கணவர் நவாப் திமுக நகர செயலாளராக இருந்து வருகிறார். 

23
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம்

இந்நிலையில், ஆணையாளர் அறையில் கடந்த மாதம் 25-ம் தேதி சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் நவாப் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், அவர்களை ஆணையாளர் சமதானப்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடிகாரத்தில் ரகசிய கேமிராவை வைத்து யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். 

33
நகர திமுக செயலாளர் நவாப்

இந்நிலையில் திமுக கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட திமுக நகர செயலாளரும், நகராட்சி தலைவரின் கணவருமான நவாப் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories