கொடைக்கானல் சுங்கச்சாவடியில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சுற்றுலாப்பணிகளை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. கார், வேன்களுக்கு நுழைவு கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஊட்டிக்கு அடுத்து மிக முக்கியமான மலைவாசஸ்தலமாக "மலைகளின் இளவரசி" என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உள்ளது. குளுகுளுவென இருக்கும் கிளைமேட், மூடுபனி நிறைந்த மலைகள், அமைதியான ஏரிகள் மற்றும் பசுமையான காடுகள் என ரம்மியமாக இருக்கும் மலைகளின் இளவரசியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
23
கொடைக்கானல் சுங்கச்சாவடி நுழைவு கட்டணம் உயர்வு
கொடைக்கானலின் நுழைவு வாயிலில் ஒரு சுங்கக் கட்டணம் அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கார், பேருந்து, லாரி என வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானலுக்கு வரும் நுழைவு சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
33
கார், வேன்களுக்கு இனி எவ்வளவு கட்டணம்?
அதாவது கொடைக்கானலுக்கு வரும் ஜீப், கார் போன்ற சிறிய ரக வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் 60 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொடைக்கானலுக்கு வரும் பேருந்து, வேன்களுக்கான கட்டணம் 250 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானலுக்கு வரும் லாரி உள்பட சரக்கு வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் 100 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் சுங்கச்சாவடியில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.