Published : Jun 03, 2025, 01:03 PM ISTUpdated : Jun 03, 2025, 01:22 PM IST
தனது புதிய படமான 'தக் லைஃப்' வெளியீட்டிற்கு பாதுகாப்பு கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்த மனுவில், கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வருகிற 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்பட விளம்பர நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து 'தக் லைஃப்' திரைப்பட வெளியிட தடை விதித்தனர். இதனையடுத்து நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் தனது புதிய படமான 'தக் லைஃப்' வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிஐஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
26
'கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது'
நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து கமல்ஹாசனைக் கடுமையாகக் கண்டித்தது. கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல் கூறியுள்ளார். அவர் வரலாற்று ஆய்வாளரா? கன்னட மக்களின் மனம் புண்படுகிறது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் மனு பரிசீலிக்கப்படும். நீர், நிலம், மொழி குறித்து மக்களுக்கு பற்று உள்ளது. மொழி முக்கியம். மன்னிப்பு கேட்டால் மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்.
36
மன்னிப்பு கேட்காமல் அலட்சியம் காட்டுகிறீர்கள்
கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது எனக் கூற கமல் வரலாற்று ஆய்வாளரா? ராஜகோபாலாச்சாரி கூட மன்னிப்பு கேட்டார். இன்றைய பதற்றமான நிலைக்கு நீங்களே காரணம். ஆனால் மன்னிப்பு கேட்காமல் அலட்சியம் காட்டுகிறீர்கள். . நீங்களே பிரச்னையை உருவாக்கிவிட்டு பாதுகாப்பு கேட்கிறீர்கள். கமல் சாதாரண மனிதர் அல்ல, பொது நபர்.
கமல் தனது கருத்தை மறுக்கவில்லை, சொன்னது சரி என்கிறார். இப்போது படம் ஓட வேண்டும் எனக் கேட்கிறார். பல கோடி முதலீடு செய்திருக்கலாம், ஆனால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது.
சொல்லுரிமை முக்கியம் தான், ஆனால் அது பிறர் மனதைப் புண்படுத்தக் கூடாது. பிரச்னைக்குக் காரணமான நீங்கள் இப்போது பாதுகாப்பு கேட்கிறீர்கள். கோடிகள் முதலீடு செய்திருக்கலாம், ஆனால் கன்னட மக்களின் மனம் உயர்ந்தது. கமல் சாதாரண மனிதர் அல்ல, பொது நபர். அவர் மன்னிப்பு கேட்கவில்லை, சொன்னது சரி என்கிறார்.
இதுபோன்ற கருத்துகளால் கன்னட மக்களின் மனம் புண்படுவதை ஏற்க முடியாது. அப்படியானால், கர்நாடகா ஏன் உங்களுக்கு? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
56
பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்
கமல் தரப்பு வழக்கறிஞர் தியான் சின்னப்பா, "படம் பார்ப்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எனவே படத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
நீதிபதி நாகபிரசன்னா, பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். ஆனால் அதற்கு முன், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். வரலாற்று ஆய்வாளர் ஆதாரங்களுடன் கூறியிருந்தால், விவாதத்திற்குரியதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது கமல் தனது பேச்சைத் திரும்பப் பெற முடியாது. மன்னிப்பு கேட்காமல் திரும்பப் பெற முடியாது.
66
மன்னிப்பு கேட்பது பற்றி யோசியுங்கள்- 2.30 மணிக்கு வருகிறோம்
. உங்கள் கருத்தால் நடிகர் சிவராஜ்குமாருக்கும் பிரச்னை. மன்னிப்பு கேட்பது பற்றி யோசித்து, மதியம் 2.30 மணிக்கு ஆஜராகுங்கள். நானும் 'தக் லைஃப்' படத்தைப் பார்க்க விரும்பினேன். ஆனால் இந்த சர்ச்சையால் பார்க்க முடியவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்று கூறி மதியம் 2.30 மணிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.