இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கொலை செய்தவர்கள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி ஓடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து வசூல்ராஜா கொலை சம்பவம் தொடர்பாக திலீப், சிவா, சுரேஷ் சூர்யா, பரத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வசூல் ராஜா நாட்டு வெடிகுண்டுகளை கையாள்வதில் திறமையான நபர் என கூறப்படும் நிலையில் அவரது பாணியிலேயே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், இதுவரை கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.