இன்னும் 3 மாதங்களில் குட் நியூஸ்! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை! உதயநிதி ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 30 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில்: 2021-ல் ஆட்சிக்கு வந்ததும் நம்முடைய முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்திற்குத் தான். இந்த திட்டத்தின் மூலம், மகளிர் சுமார் 620 கோடி பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
25
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வெரு மகளிரும், தாய்மார்களும், மாதம் 900 ரூபாய் வரை சேமிக்கின்றார்கள். அடுத்து, பெண்கள் படிக்க வேண்டும். பள்ளிப்படிப்பு முடித்து வீட்டில் உட்கார்ந்து விட கூடாது, காலேஜ் சென்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்று புதுமைப் பெண் என்கின்ற திட்டம். அரசுப்பள்ளியில படித்து உயர்கல்வி சேருகின்ற ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய அந்த புதுமைப்பெண் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள். மாணவிகளுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் உண்டு என்று சென்ற வருடம் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் தொடங்கி தைத்தார்கள். இந்த இரண்டு திட்டங்கள் மூலம், கிட்டத்தட்ட 8 லட்சம் மாணவ – மாணவிகள் பயன்பெற்று வருகின்றார்கள்.
35
School Student
அதேபோல காலையிலே எழுந்து சீக்கரம் வேலைக்கு போகும் பெற்றோர்கள் முக்கியமாக கிராமப்பகுதிகளில் குழந்தைகளை வெறும் வயிற்றோடு அனுப்பி வைத்து விடுகின்றார்கள். ஆனால் இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார். காலையில் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு சென்றால் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு காலையில் பள்ளிக்கூடத்தில் தரமான உணவு, அதன் பிறகுதான் அவர்களுக்கு கல்வி. ஒவ்வொரு நாளும் 20 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.
45
magalir urimai thogai
எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம் அதை செயல்படுத்தியவர் நம்முடைய தலைவர் அவர்கள். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சென்று கொண்டிருக்கிறது. முதலமைச்சர் அவர்களுடைய அறிவுரையை பெற்று இன்னும் 3 மாதங்களில் இன்னும் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கவும் நம்முடைய திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே, இந்த அரசு உங்களுக்கான அரசாக, உங்களுக்காக உழைக்கின்ற அரசாக செயல்பட்டு வருகின்றது.
55
சமீபத்தில் மத்திய அரசு இந்தாண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தது. நான் கூட சொன்னேன். அது மத்திய அரசு பட்ஜெட் அல்ல. ஒருத்தருக்குமே யூஸ் இல்லாத பட்ஜெட். யூஸ்லெஸ் பட்ஜெட்டுன்னு சொன்னேன். தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபா கூட நிதி ஒதுக்கவில்லை. அரசுக்குதான் நிதி ஒதுக்கல்லைன்னா, தமிழ்நாடுங்கற பேர்கூட பட்ஜெட்ல இடம் பெறவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 20 நிமிடம் நாடாளுமன்றத்தில் அந்த பட்ஜெட்டை படித்தார்கள். ஒரு முறை கூட தமிழ்நாடுங்கிற பெயர் உச்சரிக்கப்படவில்லை. ஒரு ரூபா கூட ஒதுக்கல. இப்படி இருக்கிறப்பவே நம்முடைய அரசு, இந்த அளவுக்கு திட்டங்களை செயல்படுத்திட்டு இருக்கிறது என உதயநிதி தெரிவித்துள்ளார்.