கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் ரெடி.! எத்தனை ரயில் நிலையங்கள்- வெளியான சூப்பர் அறிவிப்பு

Published : Feb 14, 2025, 04:38 PM IST

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குள் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும்.

PREV
15
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் ரெடி.!  எத்தனை ரயில் நிலையங்கள்- வெளியான சூப்பர் அறிவிப்பு
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் ரெடி.! எத்தனை ரயில் நிலையங்கள்- வெளியான சூப்பர் அறிவிப்பு

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்குள் வர மக்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்குள் வர மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report)தயார் செய்யப்பட்டது.

25
அரசிடம் அறிக்கை சமர்பிப்பு

இதனையடுத்து  தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே. கோபால் அவர்களிடம் அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மு.அ.சித்திக் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார் இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

35
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்

மெட்ரோ இரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை திருத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி. மெட்ரோ வழித்தடம் நிலை 2-இல் மற்றும் மேம்பாலச் சாலை நிலை-1-இல் முன்மொழியப்பட்டுள்ளது. இது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும் வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப் பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

45
செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்

இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம். பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும்.
 

55
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:

வழித்தடத்தின் மொத்த நீளம்: 15.46 கி.மீ

உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 13

மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,335 கோடி. (மேம்பாலச் சாலை உட்பட) 

Read more Photos on
click me!

Recommended Stories