ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விபரம்

Published : May 27, 2023, 11:52 AM IST

வருகிற ஜூன் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

PREV
14
ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விபரம்

தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கப்படுவதுண்டு.  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம் ஆகும்.

24

வைகாசி விசாகம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் இரண்டாம் தேதி முதல் ஜூன் மூன்றாம் தேதி காலை வரை கடைபிடிக்கப்பட இருக்கிறது.

34

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற ஜூன் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 19-ம் தேதி வெள்ளிக்கிழமை 02. 06. 2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

44

அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி ((Negotiable Instrument Act 1881) பொது விடுமுறை நாள் அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.     இந்த விடுமுறைக்குப் பதிலாக 10.06.2023 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories