இதனைத் தொடர்ந்து தங்களது வாதங்களை முன்வைத்த பட தயாரிப்பு நிறுவனம், ''ஜனநாயகன் பட விவகாரத்தில் ஜனவரி 29ம் தேதிக்கு பிறகு அனைத்தும் மறுக்கப்பட்டது. சென்சார் போர்டிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. தகவல் கிடைத்தவுடன் நீதிமன்றத்தை அணுகினோம்.
விதிகளை ஆய்வு செய்து தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். அவர் உத்தரவில் எந்த தவறும் இல்லை. விதிகளின்படி 2 நாளில் சென்சார் சர்டிபிகேட் வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்''என்று தெரிவிக்கப்பட்டது.
பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிபதி கேள்வி
அப்போது பேசிய நீதிபதி, ''தணிக்கை வாரியத்துக்கு ஒரு மணி நேரமாவது அவகாசம் தரப்பட்டதா? சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? ஒருநாள் கூட அவகாசம் வழங்க வேண்டாமா? போதுமான கால அவகாசம் தணிக்கை வாரியத்துக்கு கொடுத்திருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.