பொங்கல் பண்டிகைக்கு ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள் பாமக தலைவர் அன்புமணி, வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 14, 15, 17, 18 ஆகிய நாள்களில் மொத்தம் ரூ.850 கோடிக்கு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துதில் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, மதுவைக் கொடுத்து ஏழைக் குடும்பங்களைச் சீரழிப்பதில் மட்டும் தான் அருவருக்கத்தக்க சாதனை மேல் சாதனை செய்து வருகிறது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.