RAIN : அடுத்த 3 நாட்கள்.. விடாமல் பெய்யப் போகுது மழை.! எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்

First Published | Jun 23, 2024, 2:00 PM IST

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், நாளை மற்றும் நாளை மறுதினம் திருப்பூர். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

தமிழகத்தில் மழை எச்சரிக்கை

மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 23.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கன மழைக்கு வாய்ப்பு

24.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tap to resize

சென்னை, புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36'-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27"-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

School Student: பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு! பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

23.06.2024 முதல் 27.06.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று.. மீண்டும் பூமிக்கு வந்து மெர்சல் காட்டிய இஸ்ரோ.. பெரும் சாதனை!!
 

Tamil Nadu Rains

வங்கக்கடல் பகுதிகள்:

24.06.2024: தென்மேற்கு அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்குவங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25.06.2024 மற்றும் 26.06.2024: தென்மேற்கு அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

Latest Videos

click me!