வடகிழக்கு பருவமழை காலத்தில் அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமையான இன்றைய தினம் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் முழு நேரம் செயல்படும்.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே குஷிதான். அதுவும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி விட்டால் பள்ளி மாணவர்கள் டிவி முன்னாடி அமர்ந்து கொண்டு நமது மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்த்து காத்து கிடப்பது வழக்கம். இந்நிலையில் இம்முறை வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது.
25
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனால் நீர்நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமையான இன்றைய தினம் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் முழு நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
35
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் நவம்பர் 24ம் தேதி திங்கள் கிழமை அன்று மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடுகட்டும் விதமாக இன்று மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும். மேலும் திங்கள் கிழமை கால அட்டவணையை பின்பற்றி பள்ளி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கனமழை காரணமாக அக்டோபர் 22ம் தேதி புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக இன்று சனிக்கிழமை அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் பள்ளிகளுக்கும் வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதன் கிழமை கால அட்டவணையை பின்பற்றி பள்ளி முழு நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
55
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களால் அக்டோபர் 16ம் தேதி வியாழக்கிழமை மழையின் காராணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 21ம் தேதி சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும். மேலும் வியாழக்கிழமை அட்டவணையை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.