ரயில்களில் மூட்டை மூட்டையாக வரும் வெங்காயம்.! இனி ஒரு கிலோ இவ்வளவு தானா.?

First Published Oct 21, 2024, 7:22 AM IST

காரீப் பருவ வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதால், வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் வெங்காயத்தை முதல்முறையாக ரயில் மூலம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

onion rate today

உச்சத்தில் காய்கறி விலை

சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகளாகும், அந்தவகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை சமையலுக்கு இன்றியமையாதது. எனவே ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை அதிகரித்தால் இல்லத்தரசிகளின் நிலைமை பரிதாபம் தான். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ளது.

பருவமழை மற்றும் வெயிலின் தாக்கத்தால்   காரீப் பருவ வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக்கில் பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. மேலும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததும் வெங்காய விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ வெங்காயம் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தக்காளிக்கு போட்டியாக வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது.
 

TOMATO

லாரிகளில் வெங்காயம்

காய்கறி சந்தையில் 5 கிலோ வெங்காயத்தை மொத்தமாக வாங்கி செல்பவர்கள் தற்போது 1 கிலோ வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வகையில் தமிழகத்தில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது.

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல தமிழக அரசும் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயும், வெங்காயத்தின் விலை 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 

Latest Videos


Onion Price Today

வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 45 முதல் 60ரூபாய்க்கும், வெங்காயத்தின் விலை 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வெங்காயத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்த இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது. தற்போது முதல் முறையாக ரயில்களில் வெங்காயத்தை அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு வெங்காயம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1600 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து ரயில்கள் மூலம் டெல்லிக்கு வந்துள்ளது.

Onion

ரயில்களில் வெங்காயம்

இந்த வெங்காயத்தை பொதுமக்களுக்கு குறைவான விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. லாரிகளில் வெங்காயத்தை அனுப்புவதால் பல லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ரயில்களில் வெங்காயத்தை அனுப்பும் பணியை தொடங்கப்பட்டுள்ளது.

இதே போல வெங்காயத்தின் உச்சத்தில் உள்ள மாநிலங்களுக்கு ரயில்களில் வெங்காயத்தை அனுப்ப வகையில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுவரை சுமார் 92,000 மெட்ரிக் டன் வெங்காயம் சாலை மார்க்கமாக பல்வேறு மாநிலங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

vegetable price

காய்கறிகள் விலை என்ன.?

இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அவரைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும்ம், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது
 

click me!