செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (42). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா(36). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் எதிர்வீட்டில் வசித்து வந்த திருமணமான சுகிலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்தனர்.