November Month School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? வெளியான தகவல்!

First Published Oct 25, 2024, 12:42 PM IST

November Month School Holiday: தமிழக பள்ளிகளுக்கு நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. தீபாவளி, வார இறுதி நாட்கள் உட்பட மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை இங்கே காணலாம்.

பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு சொல்ல முடியாத ஒருவிதமான குஷிதான். இந்நிலையில் ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாலும் விடுமுறை அதிகமாக கிடைக்கும் மாதங்கள் என்றால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் தான். போதும் போதும் என்கிற அளவுக்கு வரிசை கட்டி விடுமுறை வரும். 

குறிப்பாக செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் விடுமுறைகள் நிறைந்த மாதமாக இருக்கும். 

இதையும் படிங்க: Minister Duraimurugan: அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதியால் பரபரப்பு!

Latest Videos


இதனால் மாணவர்களுக்கு அதிக விடுமுறை நாட்கள் கிடைத்தது.  அதேபோல், தற்போது வரவிருக்கும் நவம்பரிலும் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர். 

விடுமுறை பட்டியல் மற்றும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். 2024-25ம் கல்வியாண்டுக்கான விடுமுறை அட்டவணை இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே அந்த அந்த மாநில அரசின் சார்பாக அனுப்பப்பட்டு இருக்கும். அதன்படி தமிழக அரசு சார்பாக வெளியிட்டுள்ள நாட்காட்டில் நவம்பர் மாதத்தில் எந்ததெந்த நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம். 

இதையும் படிங்க: Job Vacancy: டிகிரி முடித்தால் போதும்! யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை! மாதம் ரூ.85,920 வரை சம்பளம்!

வரும் நவம்பரில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் முன்கூட்டியே வருகிறது. அதாவது அக்டோபர் 31ம் தேதியே தீபாவளி பண்டிகை வருகிறது. அன்றைய தினம் விடுமுறையாகிவிடுகிறது. 

நவம்பர் 1ம் தேதி அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று  தீபாவளி மறுநாள் தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி சனி, ஞாயிறு வருகிறது. அதேபோல், நவம்பர் 9 மற்றும் 10ம் தேதியும், நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வருவதால் விடுமுறையாகிவிடுகிறது. அதேபோல், நவம்பர் 23, 24ம் மற்றும் 30ம் தேதி விடுமுறை. நவம்பர் மாதத்தில் மட்டும் பள்ளிகளுக்கு மொத்தம் 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. 

click me!