பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்ற வார்த்தையை காதில் கேட்டாலே சொல்ல முடியாத அளவுக்கு குஷிதான். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தால் விடுமுறை விடுவார்களாக என டிவி முன்னாடி அமர்ந்து பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்து காத்து கிடப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாகவே போதும் போதும் என்ற அளவுக்கு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறைகள் கொட்டி கிடந்தது.
24
School Holiday
குறிப்பாக ஃபெஞ்சல் புயல் விடுமுறை மற்றும் அரையாண்டு விடுமுறைகள் கிடைத்தது. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு என்றாலே தியாகராஜர் ஆராதனை விழாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் தியாகராஜர் ஆராதனை ஒவ்வொரு ஆண்டு வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளதால் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பாடாது. ஏற்கனவே 6 நாட்கள் பொங்கல் தொடர் விடுமுறையில் ஜனவரி 18ம் தேதி வருவதால் வேலை நாள் தொடர்பான மாற்று தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.