ரெட் அலர்ட்! இன்று இரவு முதல் மழை வலுக்கும்! எந்தெந்த மாவட்டங்களில்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Published : May 23, 2025, 03:25 PM IST

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் தொடங்கும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

PREV
15
தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25
ரெட் அலர்ட்

அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

35
கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

மே 25 மற்றும் 26 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி இடங்களில் கன முதல் அதி கனமழையும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

45
சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கன்னியாகுமரியில் இன்று இரவு முதல் மழை வலுக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

55
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு முதல் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் இரவு முதல் மழை பெய்யத் தொடங்கும். அதேபோல காவிரி, சிறுவாணி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். கேரள கடற்கரை மற்றும் மலைத்தொடர்கள், கோவா, மகாராஷ்டிரா கடலோர மற்றும் மலைத்தொடர் பகுதிகள், குறிப்பாக மும்பை நகர் பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories